ம ழைக்காலம் தொடங்கி விட்டாலே சாருலதா வீடு வீடாக போக தொடங்கி விடுவாள் . வேற எதற்கும் இல்லை . செடிகள் மீது காதல் கொண்டு அதை சேகரித்து வளர்த்து ரசிப்பதில்தான் . மழையில் நனைந்துக் கொண்டே போய் செடிகளை சேகரிப்பதில் கூடுதலான சந்தோசம் . அவளுக்கும் பிடித்த பருவம் இதுதான் . இந்த செடி பக்கத்து வீட்டு ராணி அக்கா கொடுத்தது , இது எதிர் வீட்டு மேரி அக்கா கொடுத்தது என்று சொல்லிக் கொள்வதில் அவளுக்கு ஒரு தனி ஆசை . கொஞ்சம் விட்டால் போதும் சாரு செடிகளை வேறோடு பிடுங்கிக் கொண்டு வந்து விடுவாள். ரோஜா , மல்லி , முல்லை , செம்பருத்தி , செவ்வந்தி , அரளி என பல பூக்கள் அவள் வீட்டை அலங்கரித்து கொண்டு இருப்பதில் சந்தோசம் அடைவாள் . அப்படி வளர்த்ததில் ரோஜா செடி அவள் உயரத்துக்கு வள...
கருத்துகள்