அரும்பு(சிறுகதை)
ச ந்தோஷ் ஆபீஸ் விஷயமாக வெளியூர் போயிருந்தான் . அவன் ஊரில் இருந்து திரும்புவதற்குள் மனைவி ரூபா அவனிடத்தில் கைபேசியில் பேசிக்கொண்டு இருப்பாள் . அப்படி பேசும்போதெல்லாம் , " பக்கத்து வீட்டுக்கு ஒரு அக்கா குடித்தனம் வந்து இருக்கிறார்கள் . அவங்க நல்லா பழகுறாங்க , அருமையான குணம் , எது சமைத்தாலும் நமக்கு கொடுக்கிறார்கள் . அந்த அக்கா சமையல் மிகவும் நல்லாயிருக்கு " என்று சொல்லி அக்கா புராணம்தான் பாடுவாள் . ச ந்தோஷ் காது கொடுத்து கேட்கிறானோ இல்லையோ ரூபா சொல்லிமுடித்து விடுவாள் . அன்று அவன் அலுவலகத்தில் இருந்து வீடு வருவதற்கு சற்று முன்புதான் பக்கத்துக்கு வீட்டு அக்கா கொழக்கட்டையும் அவுல் பாயசமும் கொடுத்து விட்டு போயிருந்தாள் . அவன் வீட்டில் உள்ளே நுழைந்ததும் ஹாலின் தரையில் மல்லி அரும்பு கிடந்தது . சந்தோசுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்தான் . ரூபா மல்லி பூவை தலையில் வைக்க மாட்டாள் . மல்லி வாசனையென்றால் தலை வலிக்கும் என்பாள் . அடுத்துவந்த இரண்டு நாள்களும் மல்லி அரும...